சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி: ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி: ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு
X
13 வயது சிறுமியின் தாய் தடுத்து நிறுத்தி மீட்பு. பொதுமக்கள் கூடியதால் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு.

ஜெயங்கொண்டத்தில் 16 வயது சிறுமி 13 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி தன்வசப்படுத்தி வெளியூருக்கு அழைத்துச் செல்ல முயற்சி. 13 வயது சிறுமியின் தாய் தடுத்து நிறுத்தி மீட்பு. பொதுமக்கள் கூடியதால் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு.

ஜெயங்கொண்டத்தில் 16 வயது சிறுமி 13 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி தன்வசப்படுத்தி வெளியூருக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த 13 வயது சிறுமியின் தாய் தடுத்து நிறுத்தி மீட்ட சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் செய்ததாக கூறிய வழக்கில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் அண்மையில் லாட்ஜ் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அந்த 16 வயது ஆன சிறுமி தற்பொழுது ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் 13 வயது சிறுமி ஒருவரை தன்னுடன் அழைத்துச் சென்றதாகவும், இதனை அந்த சிறுமியின் தாயார் பார்த்துவிட்டு திட்டி தனது மகளை அழைத்து வரும் போது பொதுமக்கள் கூடி பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் ஜெயங்கொண்டம் -தா பழூர் பியாக கும்பகோணம் செல்லும் ரோட்டில் பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நீண்ட நேரமாக நடந்துள்ளது. இருப்பினும் போலீசாருக்கு தகவல் எட்டப்படவில்லை. இதனால் அங்கு மிகுந்த பதட்டமான சூழல் நிலவியது. பின்னர் இதுகுறித்த தகவலறிந்து காலதாமதமாக வந்த ஜெயங்கொண்டம் போலீசார் சிறுமியை அழைத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது 16 வயது சிறுமி சிகரெட் பிடித்ததும் 13 வயது சிறுமிக்கு சிகரெட் பிடிக்க வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 13 வயது சிறுமியின் உடையை 16 வயது சிறுமி மாற்றிக் கொண்டதும், மேலும் அந்த 13 வயது சிறுமியை இந்த 16 வயதுடைய சிறுமி வெளியூருக்கு அழைத்துச் செல்வதாகவும், பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி தன்வசப்படுத்திக் கொண்டு அழைத்துச் செல்ல தயாரானாரனதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் 16 வயதுடைய சிறுமி அடிக்கடி பஸ் நிலையத்தில் நிற்பதாகவும், சிலருடன் சிறுமிக்கு பழக்கம் இருந்ததாகவும் இதனை போலீசார் பார்த்து சிறுமியை விரட்டி விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சிறுமியின் பாலியல் வழக்கில் கையூட்டு பெற்றுக் கொண்டு சிலரை காப்பாற்ற காவல் அதிகாரி ஒருவர் முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 16 வயதுடைய சிறுமியை வெளியில் நடமாட விட்டால் பல சிறுமிகளின் வாழ்க்கை சீரழியும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அந்த சிறுமி மீது மேல் நடவடிக்கை மேற்கொண்டு இளம் வயது சிறுமிகளை காப்பாற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 16 வயது சிறுமி 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!