அரியலூர் சிறுமியை கடத்திய கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

அரியலூர் சிறுமியை கடத்திய கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
X
கைது செய்யப்பட்ட சிவா.
அரியலூர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருதமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் கூலி தொழிலாளி. இவர் பெண்ணாடம் பகுதியில் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவா ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு அருகே உள்ள சுண்டிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி துக்க காரியத்திற்கு சென்றபோது பழக்கம் ஏற்பட்டு அந்த சிறுமியுடன் போனில் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ள நிலையில் சிறுமியை சிலால் பகுதியில் தாய்மாமன் வீட்டில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் சிவா சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திற்கு அழைத்துச்சென்று சிவாவின் சித்தி வீட்டில் தங்க வைத்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர்கள் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story