கொரோனா தடுப்பூசிபோட்டால் பரிசு..: மக்களுக்கு பூஸ்ட் கொடுக்க புது ஐடியா
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பரிசு பெற்றுக்கொண்டனர்.
கொரோனா தடுப்பூசிபோட்டுக் கொள்பவர்களை ஊக்கப்படுத்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கொரோனா வைரஸ் தோற்று தமிழகத்தில் இரண்டாவது அலையாக பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஜெயங்கொண்டம், செங்குந்தபுரம் செல்லக்குட்டி திருமண மண்டபத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், கப சுர கசாயம் குடிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம், பர ப்ரம்மம் பவுண்டேஷன் சார்பில் தடுப்பூசிபோட்டுக் கொண்டவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் முத்துக்குமரன் பரிசுப் பொருள்களை வழங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். மேகநாதன் துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, சுகாதாரத் துறை ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன், டாக்டர் விக்னேஷ், சுகாதார ஆய்வாளர் பிரவின்குமார், கிராம சுகாதார செவிலியர்கள் புனிதா, வசந்தி மற்றும் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu