வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்

வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்
X

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலங்களையும் பொதுமக்களையும் சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் ஆறுதல் கூறினார்

மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முட்டுவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, ஸ்ரீ புரந்தான், அணைக்குடி ஆகிய கிராமத்தில் கொள்ளிட ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களையும் பொதுமக்களையும் சந்தித்து அதிமுக அரியலூர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா தாமரை முன்னாள் எம்எல்ஏ S.இராஜேந்திரன் ஆறுதல் கூறினார்.

நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் JKN ராம ஜெயலிங்கம், அரியலூர் மாவட்ட கழக துணை செயலாளர் ஆவின் துணைப் பெருந்தலைவர் திருச்சிராப்பள்ளி தங்க பிச்சமுத்து, தா .பழுர் ஒன்றிய கழக செயலாளர் வைத்தியநாதன், ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் விக்ரம பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் அசோகன், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!