சாலையில் சென்ற கார் திடீரென எரிந்தது நாசம் 5 பேர் உயிர் தப்பினர்

சாலையில் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதில் இருந்த 5 பேர் அதிர்ஸ்ட வசமாக உயிர் தப்பினர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பயம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் கும்பகோணத்திலிருந்து சேலம் செல்வதற்காக கார் ஒன்றில் இன்று குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாச்சலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லாத்தூர் அருகே சென்றபோது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதில் அதிர்ச்சி அடைந்த காரில் இருந்த 5 பேர் காரின் கதவைத்திறந்து வெளியே வந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் காரில் பொருத்தப்பட்ட ஏசியின் கியாஸ் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயினை அணைத்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture