ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 50 பேர் கைது

ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரசார்  50 பேர் கைது
X

ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட  காங்கிரஸ் கட்சியினர்.

ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை குறைக்க வலியுறுத்தியும், வேலையின்மை பிரச்சனையை தீர்க்க வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் குடியிருப்பு பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்த காங்கிரஸ் கட்சியினர் 4 ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஏழை எளிய மக்கள் பாதிக்கும் வகையில் உள்ள பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலையை குறைக்க வேண்டும் உணவு பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை வாபஸ் பெற வேண்டும். நாட்டின் நிலவிவரும் வேலையின்மை பிரச்சனையை தீர்க்கும் வகையில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!