சோழமாதேவி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

சோழமாதேவி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
X
சோழமாதேவி : சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் உண்டியலை உடைத்து 25 ஆயிரம் கொள்ளை: மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே சோழமாதேவி கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியலை உடைத்து ரூபாய் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழ மாதேவி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து, உள்ளே சென்ற மர்ம நபர்கள் கோவிலுக்குள் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூபாய் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். பின்னர் இது பற்றி கிராம மக்கள் தா.பழூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுபற்றி தா. பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai and future cities