15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட இருவர்.

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தரூபன் மகன் கமரன் (22) (கூலி தொழிலாளி). அதே பகுதி அதே தெருவை சேர்ந்த சின்னராஜா மகன் மன்மதராஜா (22) (கூலி தொழிலாளி) .

இவர்கள் இருவரும், அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு 15 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டுக்கு பின்புறம் ஒதுக்குப்புறத்தில் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கூட்டாகவும், தனித்தனியாகவும் என பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிந்து கமரன், மன்மதராஜா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!