லோடு ஆட்டோவில் இறந்து கிடந்த இளைஞர்: போலீசார் விசாரணை

லோடு ஆட்டோவில் இறந்து கிடந்த இளைஞர்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

வி.கைகாட்டி மண்ணுழி சாலையில் லோடு ஆட்டோவில், ஒருவர் இறந்து கிடந்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி மண்ணுழி சாலையில், லோடு ஆட்டோ நேற்று காலை முதல் நின்று கொண்டிருந்ததை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து, கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆட்டோ உள்ளே பார்த்த போது ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்ட போலீசார், அரியலூர் அரசு கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அரியலூர் மாவட்டம் த.பழூர் சாலை கீழவிளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் திருநாவுக்கரசு(30).இவர் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வந்தது தெரியவந்தது. இவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ரேவதி (27) என்ற பெண்ணுடன் திருணம் நடந்து குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!