அரியலூரில் அழுகிய பருத்தி பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் அழுகிய பருத்தி பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் அழுகிய பருத்தி பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் மழையால் அழுகிய பருத்தி பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தொடர் மழையால் பருத்தி, மக்காச்சோளம், பூசணி, பரங்கி உள்ளிட்டவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவைகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மழைக்கால உபரி நீரை தேக்க தூத்தூர்- வாழ்க்கை கிராமங்களிடையே கொள்ளிட்டத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

பின்னர், அவர்கள் அழுகிய பருத்தி பயிருடன் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா