ஜாதி சான்றிதழ் வழங்ககோரி மலைக்குறவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஜாதி சான்றிதழ் வழங்ககோரி மலைக்குறவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த 50க்கும் மேற்பட்ட மலைக்குறவர்கள்.

அரியலூர் மாவட்டத்தில் மலைக்குறவர் ஜாதியினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் மலைக்குறவர் ஜாதியினருக்கு நீண்ட நாட்களாக ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் மனு அளித்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் மலைக்குறவர் சாதியினர் நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நீண்டகாலமாக எஸ்டி பிரிவில் மலைக்குறவர் ஜாதி சான்றிதழ் வழங்காமல் மாவட்ட நிர்வாகத்தினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதனால் அந்த இனத்தின் மாணவர்கள் உயர்கல்வி படிக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாவதாகவும், அரசின் சலுகைகள் எதுவும் பெறமுடியாததால், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும் என கல்லாத்தூர், சன்னாவூர், கூவத்தூர், விழப்பள்ளம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி