புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க குறுவட்ட அளவில் குழுக்கள் அமைப்பு

புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க குறுவட்ட அளவில்  குழுக்கள் அமைப்பு
X
கொரோனா புதியகட்டுப்பாடுகளை கண்காணிக்க குறுவட்டஅளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்டகலெக்டர் ரத்னா தகவல். தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் உத்தரவுபடி 01.05.2021 முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மேலும், தமிழக அரசின் உத்தரவுபடி இன்று (06.05.2021) முதல் 20.05.2021 வரை புதிய கட்டுப்பாடுகள் கூடுதலாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் 50சதவீதம் பணியாளர்களுடன் இயங்கும். அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், பயணிகள் இரயில் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50சதவீதம் இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்டபரப்பு கொண்ட பெரியகடைகள், வணிக வளாகங்கள், வணிக வளாகங்களில் இயங்கும் பல சரக்குகடைகள் மற்றும் காய்கறி கடைகளும் இயங்க அனுமதி இல்லை.

அதனடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதி செய்யும் நோக்கில் குறுவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவில் துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர், மற்றும் சுகாதார ஆய்வாளர், உள்ளிட்டோர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கொரோனா நோய் தொற்று தொடர்பான அரசின் நிலையான வழிக்காட்டுதலுகளான முககவசம், சமூக இடைவெளியியை பின்பற்றுதலை பொதுமக்களிடமும், வணிக நிறுவனங்களிலும் கண்காணிப்பது, வணிக நிறுவனங்களில் கிருமி நாசினி பயன்படுத்துவதை உறுதி செய்வது, தேனீர் கடைகள், பலச்சரக்கு கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகளில் விதிமுறைகள் மீறப்படுவோர்கள் மீது உரிய அபராதம் விதிக்கவும், மீறினால் வணிக வளாகங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்டை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்று நோய் பரவிவுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெளியிடத்திலிருந்து பொதுமக்கள் எவரும் உள்ளே வராமலும், இப்பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியில் செல்லாமல் இருப்பதையும் மேற்காணும் குழுவினர் உறுதி செய்வார்கள்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது,

கைகளை அடிக்கடிசோப்பு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை தொடர்ந்து கட்டாயம் பின்பற்றிட மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா தொற்று பரவலிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா, தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!