அரியலூர் நகராட்சி சுயேட்சை கவுன்சிலர் மலர்கொடிக்கு எம்.எல்.ஏ. வாழ்த்து

அரியலூர் நகராட்சி சுயேட்சை கவுன்சிலர் மலர்கொடிக்கு எம்.எல்.ஏ. வாழ்த்து
X

அரியலூர் நகராட்சி 12-வது வார்டில் சுயேட்சையாக வெற்றி பெற்ற  மலர்கொடி மனோகரனுக்கு சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா வாழ்த்து தெரிவித்தார்.


அரியலூர் நகராட்சி சுயேட்சை கவுன்சிலர் மலர்கொடி மனோகரனுக்கு சின்னப்பா எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.

அரியலூர் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு..கவும், அ.தி.மு.க.வும் தலா 7 இடங்களை பெற்றுள்ளது. மீதமுள்ள 4 இடங்களில் சுயேட்சைகள் வென்றுள்ளனர். அவர்களில் 3 பேர் தி.மு.க.வில் இடம் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் நகராட்சி 12-வது வார்டில் சுயேட்சையாக வெற்றி பெற்ற ம.தி.மு.க. நகரச்செயலாளர் மனோகரன் மனைவி மலர்கொடி மனோகரனுக்கு, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இவர் 12வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நகரச்செயலாளர் முருகேசனின் மனைவி மணிமேகலையை எதிர்த்து சுயேட்சையாக வைரம் சின்னத்தில் நின்று 61வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். மேலும் 12வது வார்டில் மலர்கொடி மனோகரன் 3வது முறையாக வெற்றி பெற்றார் என்பதும் கடந்த முறை வெற்றிபெற்ற மலர்கொடி நகராட்சி துணைத்தலைவராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடப்பிடத்தக்கது.

12வது வார்டு வாக்குகள் விபரம்

மலர்க்கொடி சுயேச்சை - 431 - 61 வாக்குகள் அதிகம் வெற்றி

மணிமேகலை தி.மு.க - 370

கஸ்தூரி அ.தி.மு.க. - 19

அஞ்சலை அ.ம.மு.க. - 8

லட்சுமி பா.ம.க. - 6

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்