/* */

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத் திறனாளி மாணவர்களை கண்டறிந்து தேர்வு செய்ய முகாம்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
X

பைல் படம்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களுக்குட்பட்ட மருத்துவ முகாம் 10.03.2022 முதல் 12.03.2022 மற்றும் 16.03.2022 முதல் 18.03.2022 வரையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், அரியலூர் ஒன்றியத்திற்கு 10.03.2022 அன்று அரியலூர், அரசு மேல்நிலைப்பள்ளியிலும், செந்துறை ஒன்றியத்திற்கு 11.03.2022 அன்று செந்துறை, அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளியிலும், திருமானூர் ஒன்றியத்திற்கு 12.03.2022 அன்று திருமானூர், அரசு மேல்நிலைப்பள்ளியலும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு 16.03.2022 அன்று ஜெயங்கொண்டம், அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு 17.03.2022 அன்று ஆண்டிமடம், புனித மார்த்தினாள் (மெட்ரிக்) பள்ளியிலும், தா.பழூர் ஒன்றியத்திற்கு 18.03.2022 அன்று தா.பழூர், அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறவுள்ளது.

மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்களாக எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து தேர்வு செய்யவுள்ளனர்.

எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை நகல் அல்லது புதிய குடும்ப அட்டை (Smart Card) நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் முகம் தெரியும்படியான பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 4 ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 9 March 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  5. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  7. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி
  10. ஈரோடு
    தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு