குடிநீருக்காக அவதிப்படும் மணப்பத்தூர் ஊராட்சி கிராம மக்கள்

குடிநீருக்காக அவதிப்படும் மணப்பத்தூர் ஊராட்சி கிராம மக்கள்
X

குடிநீருக்காக அல்லல்படும் பொதுமக்கள். 

சித்துடையார் கிராமத்தில் கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாமல் கிராம மக்கள் அவதிபடுகின்றனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியம் மணப்பத்தூர் ஊராட்சியில் சோழன்குடிக்காடு, நந்தியன்குடிக்காடு, நத்தகுழி, படைவெட்டிகுடிக்காடு, சித்துடையார், உகந்தநாயகன்குடிக்காடு, மணப்பத்தூர் என ஏழு சிற்றூர்கள் அமைந்துள்ளது. காலை, மாலை என இரண்டு வேளை முறையாக குடிநீர் விநியோகம் இல்லாமல் கிராம பொதுமக்கள் அவதியுறும் அவலம் தொடர்கிறது. குறிப்பாக சித்துடையார் கிராமத்தில் கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாமல் தனிநபர் மின்மோட்டார் மூலம் நீர் பிடித்து கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அல்லல்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கிராம பொதுமக்கள் அவலநிலையை போக்கி காலை, மாலை என இரண்டு வேளை முறையாக குடிநீர் விநியோகம் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil