/* */

தீப்பெட்டி, சிகரெட், ஆயுதத்தோடு வராதிங்க... வாக்கு மையத்திற்கு வருவோருக்கு எஸ்.பி. அட்வைஸ்!

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வரவுள்ளவர்கள், தீப்பெட்டி, சிகரெட், ஆயுதங்களுடன் வரக்கூடாது என, அரியலூர் எஸ்பி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தீப்பெட்டி, சிகரெட்,  ஆயுதத்தோடு வராதிங்க...  வாக்கு மையத்திற்கு வருவோருக்கு எஸ்.பி. அட்வைஸ்!
X

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ஆம் தேதி எண்ணப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூரில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. இப்பணிக்கு வரவுள்ளவர்களுக்கான கட்டுப்பாடுகளை, அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டசபை தேர்தல் 2021, வாக்கு எண்ணிக்கையானது, கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு, எந்த ஒரு வெற்றிக் கொண்டாட்டமும், ஊர்வலமும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வெற்றி சான்றிதழை பெற, வெற்றி வேட்பாளர் உடன் இருவருக்கும் மிகாமல் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மேலும், 144 தடை உத்தரவு மற்றும் ஞாயிறு பொது முடக்கம் இருப்பதால் பொதுமக்களளோ, கட்சி உறுப்பினர்களோ வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியில் கூட்டமாய் கூடுவதை தவிர்க்க வேண்டும். அரியலூர் - கீழப்பழுவூர் சாலையில் தேர்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

தேர்தல் நடத்தும் அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை உள்ள முகவர்கள் மட்டுமே, காலை 07.15 மணிக்கு முன்னர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படும் முகவர்கள், தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன், லேப்டாப், மின்னணு பொருட்கள் , தீப்பெட்டி, சிகரெட் மற்றும் எந்த ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது. கட்சி சின்னங்கள் அனுமதிக்கப்படாது.

வாக்கு எண்ணும் மையத்திலே குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் பாட்டில்களுக்கு அனுமதி இல்லை. நோட்புக், பேப்பர் மற்றும் பென்சில், பால் பாயிண்ட் பேனா மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படும். கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட நோட் கொண்டு வர அனுமதி இல்லை.

மேலும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள்ளான, கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை அல்லது இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழை பெற வேண்டும். முகக்கவசம், சமூக இடைவேளை, கை கழுவுதலால் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.

காய்ச்சல், சளி போன்ற கொரோனா தொற்றின் அறிகுறி இருப்பவருக்கு அனுமதி மறுக்கப்படும். உடல் வெப்பநிலை சாதாரண நிலைக்கு மிகவும் அதிகமாக இருப்பின் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். இவற்றை பின்பற்றாதவர் மீது, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 30 April 2021 12:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!