அரியலூரில் இ-சேவை மையங்கள் சேவை தற்காலிக நிறுத்தம்

அரியலூரில் இ-சேவை மையங்கள் சேவை தற்காலிக நிறுத்தம்
X
இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களை மே மாதம் பத்தாம் தேதி முதல் மே மாதம் 23ஆம் தேதி வரை தற்காலிக நிறுத்தம். செய்யப்பட்டுள்ளது.

,கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவது எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்படும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இ சேவை மையம்,

அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அனைத்து இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களை மே மாதம் பத்தாம் தேதி முதல் மே மாதம் 23ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ரத்தின அறிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!