அரியலூர் மாவட்டத்தில் குடிசை வீடு கணக்கெடுக்கும் பணி பயிற்சி துவக்கம்
அரியலூர் மாவட்டத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி பயிற்சியை கலெக்டர் ரமணசரஸ்வதி துவக்கி வைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் அமைந்துள்ள 201 கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள புதிய குடிசை வீடுகளை (2010ஆம் ஆண்டிற்கு பிறகு அமைக்கப்பட்டவை) கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் கணக்கெடுக்கும் பணி தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, 04.04.2022 முதல் துவங்கி 25.04.2022-க்குள் முடிக்கப்படவுள்ளது. 2010ஆம் ஆண்டிற்கு பிறகு கட்டப்பட்டு வேறு எந்த அரசு திட்டதிலும் பயன்பெறாத குடிசை வீடுகளின் விபரங்கள் ஊராட்சி தோறும் இதற்கென நியமிக்கப்பட்ட 3 நபர்கள் குழுவால் கணக்கீடு செய்யப்படவுள்ளன.
இந்த கணக்கெடுப்பு குழுக்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் முதன்மை பயிற்றுநர் குழுக்கள் உதவி இயக்குநர், உதவி செயற்பொறியாளர் நிலையிலான அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதன்மை பயிற்றுநர் குழுக்களுக்கான பயிற்சியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.
இப்பயிற்சி வகுப்பினை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் முறையாக கற்று கணக்கெடுக்கும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu