முல்லைப் பெரியாறு அணையில் இன்னொரு சுரங்கம் வெட்ட முடியாது
முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.
மதுரையை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மே மாதம் 7ஆம் தேதி 2014 அன்று நீதிமன்றம் பெரியார் அணையில் 142 அடியாக அந்த கொள்ளளவை உயர்த்தி கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டி உள்ள பேபி அணையை பலப்படுத்திய பின் முழு கொள்ளளவான 152 அடிக்கு நீரை தேக்கி கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தது.
எனவே தமிழக பகுதிக்கு மேலும் ஒரு சுரங்க பாதை அமைத்து இதைவிட அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டால், அந்த வீணாக செல்லக்கூடிய தண்ணீரை கேரளா பகுதிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். முல்லை பெரியார் அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வர உத்தரவிட வேண்டும் எனவும் தன்னுடைய மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், அந்த புதிய அணை கட்டுவது சாத்திய மற்றதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவின் படி முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழுவில் தமிழக, கேரளா அரசின் சார்பில் தலா ஒருவர் என 2 தொழில்நுட்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளப்பட்டு முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் சுரங்கப்பாதை அமைக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை, நிபுணர்கள் குழுவில் உள்ள கேரளா பிரதிநிதி தான் இந்த கருத்தை கூறியுள்ளார். இதனை ஏற்க முடியாது என தமிழக பிரதிநிதி கூறிவிட்டார் எனவும்,
இரண்டாம் சுரங்கப்பாதை அமைப்பதால் அணையின் கொள்ளளவை தற்போதுள்ள நிலையில் இருந்து 152 அடிக்கு உயர்த்த முடியாது. அணையை பலப்படுத்தி 152 அடிக்கு தண்ணீர் தேக்குவது மட்டும் தான் தமிழக அரசின் நோக்கம், முல்லைப் பெரியாறு அணையினுடைய சேமிப்பு தன்மை அதிகரிக்கவும், வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை முறையாக பயன்படுத்தவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு தெரிந்தவர்கள் இது போன்ற வழக்கை தொடுத்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் முல்லைப் பெரியாறு அணை இருப்பது தமிழகத்தில் அல்ல கேரளாவில்...நமக்கு ஒரு செட்டில்மெண்ட் அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு மாற்றி கொடுக்கப்பட்டிருக்கிறது அவ்வளவே...
அந்த செட்டில்மெண்ட் நிலத்தில் நாம் எந்த சீர்திருத்தத்தையும் மேற்கொள்ளாதவாறு கேரள அரசு 1957ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தடுப்பரன்கள் அமைத்து வேலை செய்து கொண்டிருக்கிறது.
அவர்களை மீறி முல்லைப் பெரியாறு அணையில் எந்த மாற்றத்தையும் தமிழக அரசால் கொண்டு வந்து விட முடியாது. மாற்றங்கள் வேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளை குப்பையில் தூக்கி போட்டு இருக்கிறது கேரள மாநில அரசு.
மறுபடியும் மறுபடியும் சொல்கிறோம்.
ஆயிரம் கோடி ஆண்டொன்றுக்கு வருமானத்தை அள்ளித் தரும் தேக்கடி படகு குழாமை, எந்த நிலையிலும் மூடுவதற்கோ அல்லது சுரங்கங்களின் மூலமாக தண்ணீரை தமிழகத்திற்கு கொடுத்து விட்டு அமைதிகாப்பதற்கே கேரளா எப்போதும் முன்வராது. தமிழகத்திற்கு இந்த புரிதல் முதலில் வேண்டும்.
முல்லைப் பெரியாறு பன்மாநில நதியில்லை அது கேரளாவிற்கு சொந்தமான நதி என்று கேரளா பட்டியலில் வரவு வைத்த ஒரு நதி குறித்தான சிக்கலை, எப்படி தீர்த்துவிட முடியும்.இரண்டு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் சிக்கலை தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றம் நமக்கு முதலில் தெளிவான வழிகாட்டுதல்கள் தர வேண்டும். அந்த வழிகாட்டுதல்களை இரு மாநிலங்களும் பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பின்பற்றா விட்டால், சம்மந்தப்பட்ட மாநிலத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இதெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை.
முல்லைப் பெரியாறு அணையில் சுரங்கம் வெட்ட முடியுமா, எத்தனை சுரங்கங்கள் வெட்டலாம், எவ்வளவு தண்ணீர் நமக்கு கிடைக்கும், கூடுதலாக எவ்வளவு நிலம் பாசன வசதி பெறும் என்கிற கேள்விகள் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
அதற்கெல்லாம் ஒரே பதில் ஒருபோதும் முல்லைப் பெரியாறு அணையில் புதிய சுரங்கங்கள் வெட்ட முடியாது. அப்படி வெட்ட வேண்டுமானால் தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்கள் தமிழகத்தோடு இணைய வேண்டும்.
அல்லது தன்னாட்சி கவுன்சில் அந்தஸ்து பெற்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 3 தாலுகாக்களும் வருமென்றால் பெரியாறு அணையில் சுரங்கம் சாத்தியம்.சுரங்கம் வெட்ட வாய்ப்பு இருக்கிறதே தவிர, அணை கேரளாவின் கட்டுப்பாட்டில் இருக்கிற வரை அங்கு சுரங்கத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதே தமிழகத்தின் இலக்கு. அதனை நோக்கி பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் போராடும் என சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu