ஓபிஎஸ்-க்கு இன்னொரு சான்ஸ்..! அ.தி.மு.க.,வில் பரபரப்பு

ஓபிஎஸ்-க்கு இன்னொரு சான்ஸ்..! அ.தி.மு.க.,வில் பரபரப்பு
X
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், சிவில் கோர்டில் உள்ள வழக்கினை எங்கள் தீர்ப்பு கட்டுப்படுத்தாது எனவும் கூறியுள்ளது.

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், சிவில் கோர்டில் உள்ள வழக்கினை எங்கள் தீர்ப்பு கட்டுப்படுத்தாது எனவும் கூறியுள்ளது.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்றார் ஓ.பி.எஸ்., ஆதரவாளர் வைத்தியலிங்கம். இதன் மூலம் 3வது தீர்ப்புக்கு இபிஎஸ்க்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஓபிஎஸ்-க்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாத போது, அவைத்தலைவர் வாயிலாக பொதுக்குழு கூடி முடிவெடுத்ததை தவறாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சூழலில் முறையாக பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை என்று கருதி இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கள சூழலை ஆராய்ந்து சரியான தீர்ப்பையே சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ளது என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதிமுகவில் உச்சபட்ச அதிகாரம் பொதுக்குழுவிற்கே எனும் போது, அதை கூட்ட தனி நீதிபதி தடை விதித்திருக்கக் கூடாது. அதிமுகவில் நிலவிய முட்டுக்கட்டையை போக்க தலைமைக் கழக நிர்வாகிகளின் வலியுறுத்தின் பேரில் பொதுக்குழு கூட்டத்தை அறிவித்த அவைத்தலைவரின் அறிவிப்பை தவறு என கூற முடியாது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 11ல் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களுககு எதிராக சட்டப்படி வழக்கு தொடரலாம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகளின் உத்தரவை உறுதிப்படுத்துவதாகவும், அந்த தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருந்தாலும், தங்களுக்கு இந்த தீர்ப்பு இன்னும் பாதகமாக இல்லை என்கிறது ஓ பன்னீர்செல்வம் தரப்பு. இது தொடர்பாக வைத்திலிங்கம் கூறும் போது, பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் சிவில் கோர்டில் உள்ள வழக்கில் எங்கள் தீர்ப்பு கட்டுப்படுத்தாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடருவோம். ஆனால் இது எங்களுக்கு பெரிய பாதிப்பு கிடையாது என்றார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஓ பன்னீர்செல்வம் தரப்போ அதில் தொடர் புள்ளிகளை வைத்து வருவதால் மீண்டும் அ.தி.மு.க.,வில் பரபரப்பு தொடர்கிறது.

இதற்கிடையே தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்று கூறி எடப்பாடி பழனிசாமி, தலைமைக்கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து தான் முடிவெடுப்பேன் என்றார். அதேநேரம் சிவில் வழக்கில் தீர்ப்பு வருவதற்குள் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் வலுவான தலைவராக உயர்ந்துவிடுவார் என்றும், இந்த வழக்கால் அவருக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா