அமைச்சர் கார் செல்லும்வரை காத்திருந்த ஆம்புலன்ஸ்
அமைச்சர் கார் செல்லும்வரை நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றுக் கரைகளை பார்வையிட்டனர். இதற்காக திருவிடைமருதூர் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் ஆய்வு செய்ய அமைச்சர் சென்றார். அவரின் பின்னே அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் என 25 கார்கள் அணிவகுத்து சென்றன.
பாலத்தின் மறுபக்கத்தில் அமைச்சர் கார் செல்லும் வரைக்கும் காவல்துறையினரால் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. அமைச்சர், அதிகாரிகளின் வாகனங்கள் சென்ற பின்னர்தான் நீண்ட நேரம் காத்திருந்த ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதை பார்த்த பலரும், அமைச்சர் வாகனத்திற்காக பல மணி நேரமாக ஆம்புலன்ஸ் வாகனத்தை காவல்துறையினர்நிறுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்த வீடியோ மற்றும்புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களும் வறுத்தெடுக்கின்றனர்.
ஆம்புலன்ஸிஸ் நோயாளி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவசரமாக சைரன் ஒலித்தால் உடனே போக்குவரத்தை சரி செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட வேண்டும் என்பதுதான் விதி. ஒருவேளை ஆம்புலன்ஸில் இருந்த நோயாளிக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால் யார் பொறுப்பேற்பது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu