துவங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளை அடக்க காளையர் மல்லுக்கட்டு
X
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழாவை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார். அப்போது வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
By - N. Ravichandran |17 Jan 2022 8:30 AM IST
மதுரை அருகே உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டை, அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்தார்.
தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சீறி வரும் காளைகளை அடக்க, இளங்காளையர்கள் களமிறங்கி உள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் இப்போட்டி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா-2022-வை துவக்கி வைத்தார். அவருடன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஜல்லிக்கட்டுக்கான, பாதுகாப்பு ஏற்பாடுகளை, மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu