சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் 19 மாதங்களுக்கு பின்பு கூடுதல் விமானம்

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் 19 மாதங்களுக்கு பின்பு  கூடுதல் விமானம்
X

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 19 மாதங்களுக்கு பிறகு கூடுதல் விமானம் இயக்கப்படுகிறது.

உள்நாட்டு விமானநிலையத்தில் 19 மாதங்களுக்கு பின்பு விமானங்களின் எண்ணிக்கை 249 ஆக அதிகரித்து,பயணிகள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு 30 ஆயிரத்தை கடந்துள்ளது.கோவை, டில்லி, மும்பை,ஹைதராபாத், பெங்களூா் விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாடு முழுவதும் குறைந்து வருகிறது.இதையடுத்து ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம், கடந்த 18 ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு விமானநிலையங்களில் 100% பயணிகள் விமானங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது.

இதனால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் கடந்த 19 மாதங்களுக்கு பின்பு இன்று புறப்பாடு விமானங்கள் 125, வருகை விமானங்கள் 124, மொத்தம் 249 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து கோவைக்கு இதுவரை புறப்பாடு 4, வருகை 4 மொத்தம் 8 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.தற்போது புறப்பாடு 6, வருகை 6 ஆக 12 விமானங்களாக அதிகரித்துள்ளன.அதைப்போல் டில்லிக்கு புறப்பாடு விமானங்கள் 15, வருகை விமானங்கள் 15 வீதம் 30 விமானங்களும்,முமம்பைக்கும் புறப்பாடு,வருகை விமானங்கள் 30 ஆகவும்,பெங்களூருக்கு புறப்பாடு,வருகை விமானங்கள் 24 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதைப்போல் பயணிகள் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்து, இதுவரை இல்லாத அளவு 30 ஆயிரத்தை கடந்துள்ளது.டில்லி,மும்பை,கொல்கத்தா,கவுகாத்தி,பாட்னா,அந்தமான்,பெங்களூா்,கோவை,மதுரை விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

அதைப்போல் சென்னை விமானநிலையத்தில், உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரித்து,புறப்பாடு விமானங்கள் 200, வருகை விமானங்கள் 200, மொத்தம் 400 விமானங்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!