Actress Gauthami-நம்பிக்கை மோசடியால் நொந்து போன நடிகை கௌதமி; 25 ஆண்டு கால உழைப்புக்கு பாஜக தந்த ‘வெகுமதி’

Actress Gauthami-நம்பிக்கை மோசடியால் நொந்து போன நடிகை கௌதமி; 25 ஆண்டு கால உழைப்புக்கு பாஜக தந்த ‘வெகுமதி’
X

Actress Gauthami- நடிகை கவுதமி (கோப்பு படம்)

Actress Gauthami- பாஜவுக்காக 25 ஆண்டுகள் உழைத்தும், தனது சொத்துகளை அபகரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய பாஜக மீது அதிருப்தியடைந்த கௌதமி, நொந்துபோய் அக்கட்சியை விட்டு விலகினார்.

Actress Gauthami, trust fraud, BJP exit- “பா.ஜ.க-வில் இருக்கும் கெளதமிக்கு அழகப்பனின் அறிமுகம் ஆரம்ப காலத்திலேயே கிடைத்திருக்கிறது. அழகப்பன் தனது குடும்பத்துடன் கெளதமியிடம் நெருக்கமாகியுள்ளார். பழக்கத்தின் அடிப்படையில் கிடைத்த நம்பிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் இருந்த தனக்குச் சொந்தமான 8.16 ஏக்கர் நிலத்தை விற்றுத் தருமாறு அழகப்பனிடம் கேட்டிருக்கிறார் கெளதமி.

தனது மகளின் எதிர்காலத்துக்கு அப்பணத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்திருக்கிறார். நிலத்தை விற்பதற்காக அழகப்பனும் அண்ணா நகரை சேர்ந்த தொழிலபதிபர் பலராமன், செங்கல்பட்டை சேர்ந்த ரகுநாதன் ஆகியோரை கெளதமிக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இதையடுத்து அந்த நிலத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு பலராமன், ரகுநாதன் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணம் எழுதி கொடுத்திருக்கிறார். அதன் பின்னர் தனியார் நிறுவனத்துக்கு விற்கும் போது, நிலத்தில் பிரச்னை இருப்பதாகக் கூறி 4 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக கூறியுள்ளனர். 2 தவணையாக பணத்தை கொடுத்துள்ளனர்.


இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு நடிகை கெளதமிக்கு வருமான வரித்துறையில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. ரூ.11,17,38,907 கோட்டையூரில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்ததற்கு ரூ.2.61 கோடி கேபிட்டல் கெய்ன்ஸ் வரி செலுத்தவில்லை என அதில் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து கெளதமி அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதே அவருக்கு அப்போது தான் தெரிந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து கெளதமியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கெளதமிக்கு இதுவரை கட்சியில் இருந்து எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை. சட்ட ரீதியான தீர்வும் கிடைக்கவில்லை. அந்த கோபத்தில்தான் பா.ஜ.க-வை விட்டு வெளியேறிவிட்டார்” என்கின்றனர்

இதுதொடர்பாக பா.ஜ.க வட்டாரத்தில் விசாரித்தபோது, “அழகப்பனுக்கும் பா.ஜ.க-வுக்கும் என்ன சம்மந்தமும்? கட்சியிலேயே இல்லாத ஒருவரை பா.ஜ.க நிர்வாகிகள் காப்பாற்ற வேண்டும்? ” என்கின்றனர். ஆனால் கெளதமிக்கு நெருக்கமான சிலரிடம் இதுகுறித்து விசாரிக்கும்போது, “சென்னை சிட்டிசன் ஃபோரம் என்ற அமைப்பில் அழகப்பன் துணைத் தலைவராக இருக்கிறார். இந்த அமைப்புடன் பா.ஜ.க-வை சேர்ந்த கே.டி.ராகவன் மிக நெருக்கமான தொடர்பில் இருக்கிறார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். மாநில பா.ஜ.க நிர்வாகிகள் சிலரும் இந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கமான ஒன்று. மத்திய அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை புரமோட் செய்யும் வகையிலான பல நிகழ்ச்சிகளை இந்த அமைப்பு நடத்தியிருக்கிறது. எனவே அழகப்பனை பா.ஜ.க நிர்வாகிகள் காப்பாற்ற முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் நிறையவே இருக்கிறது” என்கின்றனர்.

அழகப்பன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை விட, அழகப்பன் பா.ஜ.க-வில் இருக்கிறாரா இல்லையா என்பதுவே தற்போது முக்கிய விவாதமாகியிருக்கிறது. இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருக்கும் பா.ஜ.க மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “கெளதமி கொடுத்த புகாரின் மீது இத்தனை நாள்களாக நடவடிக்கை எடுக்காமல், கட்சியை விட்டு விலகிய பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். கட்சியில் இருந்து வெளியே வந்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெருக்கடி கொடுத்தார்களா? என்று தெரியவில்லை.

கெளதமி கட்சிக்காக எவ்வளவு கடுமையாக உழைத்தார் என எனக்குத் தெரியும். கெளதமியின் முடிவு எனக்கு மிகுந்த கவலையைத் தருகிறது. 10 நாள்களுக்கு முன்பாகக்கூட, ஒரு வழக்கு தொடர்பாக அவரின் உதவியாளர் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். முழுமையான தகவல்களைக் கொடுக்குமாறு நானும் பதில் அளித்திருந்தேன். நிச்சயமாக கட்சிக்காரர்கள், சட்டத்துக்குப் புறம்பாக யாரையும் பாதுகாக்கப் போறது இல்லை. கெளதமி இன்னமும்கூட மாநிலத் தலைவரிடமோ, என்னிடமோ அந்தப் பிரச்னை குறித்து முழுமையாகக் கூறவில்லை.” என்றார்.

அதேபோல சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “நடிகை கெளதமியின் அறிக்கையை நானும் செய்திகளில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். கெளதமியின் உழைப்பை நாங்கள் மதிக்கிறோம். தொகுதி உடன்பாடு காரணமாக சில சமரசங்கள் செய்ய வேண்டியிருந்ததால் கெளதமிக்கு ராஜபாளையம் தொகுதி கிடைக்கவில்லை. அவருடைய குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும்” என்று எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!