விஜயகாந்த் வீடு முன்பு கண்ணீருடன் குவியும் தொண்டர்கள்!

விஜயகாந்த் வீடு முன்பு கண்ணீருடன் குவியும் தொண்டர்கள்!
X
உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 18m தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சையில் உடல்நலம் தேறிய நிலையில், கடந்த 11ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக தலைமை அலுவலகம் தெரிவித்து இருந்தது நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை அலுவலகம் இன்று தெரிவித்தது.

மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தே.மு.தி.க. தலைமை அலுவலகம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து, விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனை முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி காலமானார்.

தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டின் முன்பு தொண்டர்கள் குவித்து வரும் நிலையில், அப்பகுதியில் பாதிகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!