கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகள்: ஒரு நபர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகள்: ஒரு நபர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு
X

கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது.

கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில், இளைஞர் நீதி அமைப்பின்கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலிடம் சமர்ப்பித்தது.

இளைஞர் நீதி அமைப்பின்கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்திறன்களை மேம்படுத்தும்பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்டகுழு ஒன்று உருவாக்கப்படும் என்று 6.2.2023 அன்று முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும்விதமாக, கடந்த 11.04.2023 அன்று இளைஞர் நீதி அமைப்பின்கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து அரசு ஆணையிட்டது.

அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவானது கடந்த 2.5.2023 முதல் பொறுப்பேற்றதுடன் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்த ஏதுவாக பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டது. அதோடு மட்டுமல்லாது மேற்படி ஒரு நபர் குழுவானது மாநிலத்தில் செயல்பட்டுவரும் அனைத்து கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு மேற்கொண்டது.

அதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவானது, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் மாண்புமிகு நீதியரசரின் ஆய்வின் அடிப்படையில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டு இன்று முதல்வரிடம் வழங்கியது.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத்துறை ஆணையர் (பொறுப்பு) வே. அமுதவல்லி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்களின் மகள் சக்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil