ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி : மன்னிப்பு கேட்ட நிறுவனம்..!
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் நின்ற ரசிகர் கூட்டம்.
சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நாளன்று மழை பெய்த காரணத்தினால் ரசிகர்களின் நலன் கருதி இசை நிகழ்ச்சி வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்தார்.
இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இப்படியான நிலையில் சென்னை அடுத்த பனையூரில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்த நிலையில், மதியம் 3 மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 4 மணி ஆகியும் கேட் திறக்கவில்லை என்றும், கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்க்கிங் குளறுபடிகளால் வாகனங்களை நிறுத்தி விட்டு பலரும் நடந்தே சென்றனர். உள்ளே, ப்ளாட்டினம், டைமண்ட், கோல்ட், சில்வர் என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எந்த டிக்கெட் என்றே சரிபார்க்காமல் வந்தவர்களை உள்ளே அனுப்பியதாக புகார் எழுந்தது.
இதனால் உரிய டிக்கெட் இருந்தும் பலரால் நிகழ்ச்சியை பலரால் காண முடியவில்லை. இதனால் ஆவேசத்தில் இசை நிகழ்ச்சியே தேவையில்லை’ என சிலர் டிக்கெட்டுகளை கிழித்தெறிந்து வீடு திரும்பினர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில் சிலர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டதற்கு ACTC events நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதது பற்றி வலைதளங்களில் பலர் ஆதங்கம் தெரிவித்த நிலையில் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மன்னிப்பு மருந்திடுமா? பல் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் பணத்தைக்கொடுத்து டிக்கட் வாங்கியுள்ளனர். அவர்களால் இசை நிகழ்ச்சியை பார்க்கமுடியாமல் போய்விட்டது. அதற்குரிய பணத்தை நிறுவனம் திருப்பிக்கொடுக்குமா? எங்கள் ஏமாற்றத்திற்கு மன்னிப்பு மருந்திடுமா என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கும் நிறுவனம் பதில் சொல்லவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu