சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர்-அன்புமணி திடீர் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர்-அன்புமணி திடீர் சந்திப்பு
X
தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களிலும், நிா்வாகக் கட்டமைப்பிலும் ஊழலை ஒழிக்க, சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற சிறந்த ஆயுதம் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்த அரசு முன்வராதது வருத்தமளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தாார்.

மேலும் இந்த சட்டத்தை அமல்படுத்தக் கோரி கடந்த காலங்களில் வழக்குகள் தொடரப்பட்டபோது, ‘தமிழகத்தில் நட்புறவுடன் கூடிய மக்கள் நிா்வாகம், குடிமக்கள் அணுகுமுறை, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கால அவகாசம் ஆகிய திட்டங்கள் நடைமுறையில் இருப்பதால் சேவை பெறும் உரிமைச் சட்டம் தேவையில்லை’ என்று தமிழக அரசு விளக்கமளித்தது.

ஆனால், இந்தத் திட்டங்கள் எதுவுமே பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் சேவை கிடைப்பதையோ, கையூட்டு ஒழிக்கப்படுவதையோ உறுதி செய்யவில்லை. அதற்கு, அரசு அலுவலகங்கள் மக்களுக்கு சேவை வழங்கும் இடங்களாக இருப்பதை உறுதி செய்ய சேவை உரிமைச் சட்டம் தான் ஒரே தீா்வு. எனவே, இன்று (திங்கள்கிழமை) தொடங்கவுள்ள பேரவை கூட்டத் தொடரில் இதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்ய, முதல்வா் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசியுள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5 உள் ஒதுக்கீடு திமுக அரசு வழங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ள அன்புமணி, தமிழக அரசு இன்னும் காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது என முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்த பிறகு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்

சென்னை தலைமை செயலகத்தில் 10.5 சதவிகித வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்னியர் உள் ஒதுக்கீட்டை தரவுகளை ஆய்வு செய்து வழங்கலாம் என உச்சநீதிமன்றம் கூறி ஒன்றரை ஆண்டுகாலம் ஆகிவிட்டதாக தெரிவித்தவர், ஆனால் திமுக அரசு காலம் தாழ்த்திவிட்டதாகவும், தரவுகளை பெற இத்தனை நாட்கள் ஆகாது 15 நாட்களில் முடிய வேண்டிய வேலையை காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டினார்.

திமுக அரசு வன்னியர் உள் ஒதுக்கீட்டை இந்த கூட்டத்தொடரில் கொண்டு வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், கடந்த முப்பது ஆண்டுகளாக வட மாவட்டங்களில் கல்வி, வேலை வாய்ப்பில் பாதிக்கபட்டிருப்பதாகவும், திமுக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இதைப்போல் தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
ai healthcare technology