சுப்ரமணியன் சுவாமி சொன்ன ஒரே ஒரு ஸ்டேட்மெண்ட்..! ஆடிப்போன அண்ணாமலை ஆதரவாளர்கள்..!
சுப்ரமணியன் ஸ்வாமி (கோப்பு படம்)
பாஜகவில் இருந்து கொண்டே அக்கட்சியையும், தலைவர்களையும் அரசையும் அசராமல் விமர்சித்து வருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி. அதானி விவகாரத்தில் சமீபத்தில் விமர்சித்திருந்த அவர், இப்போது தமிழக பாஜகவின் நிலவரத்தை ஒருபிடி பிடித்திருக்கிறார். இந்தியாவில் வேறு மாநிலங்களில் உள்ளது போல, தமிழக பாஜக பணிகள் எதுவும் செய்வதில்லை என்றும் கூறி இருக்கிறார்.
இந்தியாவில் வேறு மாநிலங்களைப் போல் தமிழக பாஜக பணிகள் எதுவும் செய்வதில்லை. திமுக, அதிமுக என கூட்டணி வைத்து அக்கட்சி அரசியல் செய்யக்கூடாது. பாஜக தனியாக நிற்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டால் தான் பாஜக வளர்வதாக அர்த்தம்.
திமுக கொள்கை வழியாக எதுவும் செய்யவில்லை. நாட்டைப் பிரிக்க வேண்டும் என பேசிக்கொண்டே இருக்கும். ஆனால், தேர்தல் வரும் போது வேறு மாதிரியாக அக்கட்சியினர் பேசுவார்கள். தமிழ்நாட்டில் ஒரு முறை ஆட்சியைக் கலைத்தேன். அப்போது ரத்த ஆறு ஒடும் என்றார்கள். ஆனால், பூனைக்குட்டி கூட வெளியே வரவில்லை.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர், மீண்டும் மோடி பிரதமராக வருவார் என்பதை எப்படி சொல்ல முடியும்? பிரதமர் வேட்பாளராக மோடியை கட்சி தலைமை அறிவிக்க வேண்டும். இதுவரை அப்படி எதுவும் முடிவாகவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் இணைந்தால், ஏற்கெனவே இருக்கின்ற வாய்ப்பையும் ராகுல்காந்தி இழந்து விடுவார்" எனத் தெரிவித்துள்ளார்.
சுப்ரமணியன் சுவாமியின் இந்த விமர்சனத்தால், ’தமிழகத்தில் தாங்கள் தான் இப்போது எதிர்கட்சி, அடுத்து தமிழகத்தில் பாஜக ஆட்சி தான். பாஜக இங்கு படு வேகமாக வளர்ந்து வருகிறது’’என பெருமை பேசி வந்த அண்ணாமலை ஆதரவாளர்கள் சுப்ரமணியன் சுவாமியின் இந்தக் கருத்தால் ஒரு கணம் விக்கித்துப்போய் நிற்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu