நான் ஒரு ராசியில்லா ராஜா..! நமக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்..! ராசியில்லா எச்.ராஜா..!

நான் ஒரு ராசியில்லா ராஜா..! நமக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்..!  ராசியில்லா எச்.ராஜா..!
X

எச்.ராஜா.

தமிழக பாஜகவில் மூத்த தலைவராக இருந்து வருபவர் எச்.ராஜா. அவருக்கு ஏன் ஆளுநர் பதவி வழங்கப்படவில்லை என்ற கேள்வி பலரையும் யோசிக்கவைத்துள்ளது.

தமிழகத்திற்கு இப்போது நல்ல நேரம்தான். தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை இப்போது ஆளுநர் பதவியில் அமர வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது பாஜக. தமிழிசை சவுந்தரராஜன், எல்.கணேசன் அடுத்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் நாற்காலியை கொடுத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. மத்திய அரசை இயக்கும் சக்தியாக திமுக இருந்த காலகட்டத்தில்கூட தமிழர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றதில்லை.

அதேசமயம், இன்னொரு முக்கியமான விஷயமும் பாஜக வட்டாரத்தில் இப்போது பேசப்படுகிறது. பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு ஏன் ஆளுநர் வாய்ப்பு இன்னும் அமையவில்லை? ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா தீவிரமான ஆர்.எஸ்.எஸ்.காரர். தந்தை வழிதொட்டு ஆர்.எஸ்.எஸ்ஸில் தன்னை இணைத்துக்கொண்டவர் ஹெச்.ராஜா. இந்து முன்னணியில் இருந்த காலத்திலிருந்தே சிவகங்கை மாவட்டத்தில் சைக்கிள் மிதித்து கட்சி வளர்த்தவர். நியாயமாகப் பார்த்தால் தமிழிசைக்கு முன்னதாகவே ஆளுநர் அந்தஸ்துக்கு வந்திருக்க வேண்டியவர் ஹெச்.ராஜா. ஆனால், அடுத்தது அவர்தான் என்று சொல்லிச் சொல்லியே ராஜாவை காக்கவைத்திருக்கிறது பாஜக தலைமை.

குஜராத் தேர்தல்கள் நடந்த சமயத்தில்கூட எச்.ராஜா கேரள ஆளுநர் ஆகப்போவதாக செய்திகள் வந்தன. ஆனாலும் நடக்கவில்லை. இப்போதுகூட, யாரும் யோசித்துப் பார்த்திராத சிபிஆருக்கு யோகம் அடித்திருக்கிறது. தீவிர இந்துத்துவவாதியான எச்.ராஜாவுக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை. ராசியில்லா ராஜாவா..?

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!