தமிழகம் முழுவதும் இன்னும் இரண்டு நாட்கள் வெப்ப அலை வீசுமாம்
கோப்புப்படம்
தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் புதுவை மற்றும் காரைக்காலில் வெயில் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. நேற்று காலை பல இடங்களில் இயல்பை விட மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 4.5டிகிரி முதல் பதிந்து 5டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவானதால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் தவித்தனர் .
நேற்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 16.7 டிகிரி ஈரோடு மற்றும் சேலத்தில் தலா 16.16 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மாலை 5:30 மணி நிலவரப்படி அருப்புக்கோட்டை ,சென்னை மீனம்பாக்கம், கோயம்புத்தூர் ,தர்மபுரி ,மதுரை ,பாளையங்கோட்டை ,சேலம், திருச்சி, ஈரோடு ,கரூர் ,திருத்தணி ,புதுக்கோட்டை ,வேலூர் ,விருத்தாசலம் ஆகிய 14 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது.
ஏப்ரல் முதல் வாரத்திலேயே கடுமையாக வாட்டுவதால் வரும் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் எப்படி இருக்குமா என்ற கவலை மக்களிடம் இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வடதமிழாக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள கடலோர மாவட்டங்களில் நாளை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu