9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை

9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை
X

பைல் படம்.

தமிழகத்தில் 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் 10, 11ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் 10, 11ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் 10.11.2021 மற்றும் 11.11.2021 ஆகிய இரு நாட்கள் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்