தலைமை ஆசிரியர் இல்லாத 680 அரசு மேல்நிலைப் பள்ளிகள்
அரசு மேல்நிலைப்பள்ளி - கோப்புப்படம்
பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் 37 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மட்டும் 6000ம் உள்ளன. தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்தனை பள்ளிகளிலும் கோடை விடுமுறை காலம் என்பதால் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் இடமாறுதல் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன்படி இரண்டு தினங்களுக்கு முன் இடமாறுதல் கவுன்சிலிங் துவங்கியது.
இடமாறுதலின்போது பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக கூடுதல் பொறுப்பில் இருந்தவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாறுதல் வாங்கி சென்று விட்டனர். அதையடுத்து 680 மேல்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் அப்பள்ளிகள் எப்படி செயல்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிர்வாக பிரச்னை ஏற்படும் என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே அதற்குள் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், கல்வித்தரத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர் பற்றாக்குறையினை உடனே சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu