/* */

கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி : சென்னையில் நடந்த சோகம்

எவ்வளவோ முயன்றும் மற்ற அர்ச்சகர்களால் மீட்க முடியாததால் சில நிமிடங்களிலேயே 5 அர்ச்சகர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி : சென்னையில்  நடந்த சோகம்
X

அர்ச்சகர்கள்  மூழ்கி  உயிரிழந்த குளம்

சென்னை ஆலந்தூரில் உள்ள நங்கநல்லூரில் பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

வழக்கமாக, தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உற்சவ மூர்ததிகளையும், அபிஷேகப் பொருட்களையும் நீரில் 3 முறை மூழ்கடித்து எடுத்து செல்வார்கள். இந்தப் பணிகளில் அர்ச்சகர்கள் ஈடுபடுவர். அந்த வகையில், இன்று காலையும் கோயில் அருகே உள்ள மூவசரம்பட்டு குளத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் இறங்கினர். பின்னர் உற்சவ மூர்த்திகள் மற்றும் அபிஷேக பொருட்களுடன் அவர்கள் இடுப்பளவு உள்ள நீரில் மூழ்கினர். இரண்டு முறை எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவர்கள் மூழ்கி எழுந்தனர். மூன்றாவது முறையாக மூழ்கிய போது, அர்ச்சகர் ஒருவரின் கால், குளத்தில் உள்ள சேற்றில் சிக்கியது.

சேற்றில் கால் நன்றாக சிக்கிக் கொண்டதால் அவர் நிலைத்தடுமாறி நீருக்குள் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த மற்ற அர்ச்சகர்கள், என்ன ஆனது எனத் தெரியாமல் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களும் அங்கிருந்த சேற்றில் சிக்கினர். இவ்வாறு 5 இளம் அர்ச்சகர்கள் சேற்றில் சிக்கிக்கொண்டு தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். எவ்வளவு முயன்றும் மற்ற அர்ச்சகர்களால் அவர்களை வெளியே இழுக்க முடியவில்லை. இதனால் அடுத்த சில நிமிடங்களிலேயே 5 அர்ச்சகர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இருந்த ஆலந்தூர் எம்எல்ஏ தா.மோ. அன்பரசனுக்கு இதுகுறித்து தகவல் வந்தது. இதையடுத்து, உடனடியாக முதல்வரின் அனுமதியை பெற்ற அவர், சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அதேபோல, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிலாலும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதனிடையே, உயிரிழந்த 5 அர்ச்சகர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On: 5 April 2023 1:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  8. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  9. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  10. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி