401 New Cases Of Corona In TN; தமிழகத்தில் இன்று புதிதாக 401 பேருக்கு கொரோனா

401 New Cases Of Corona In TN; தமிழகத்தில் இன்று புதிதாக 401 பேருக்கு கொரோனா
X

கோப்பு படம்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 401 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி, இன்று‌ (ஏப்.,11) செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 401 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 215 பேர், பெண்கள் 186 பேர் அடங்குவர். சிங்கப்பூரில் இருந்து வந்த‌ பயணி ஒருவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், இந்தோனேசியாவில் இருந்து வந்த ஒரு பயணிக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

சென்னையில் அதிகபட்சமாக 110 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 பேரும், கோவை மாவட்டத்தில் 41 பேரும், சேலத்தில் 23 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 பேரும் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 198 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 301 ஆக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!