ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27 ம் தேதி அரசு விடுமுறை

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27 ம் தேதி அரசு விடுமுறை
X

பைல் படம்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27 ம் தேதி அரசு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ம் தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் வருகை தந்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், தனியார் நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture