கூல் லிப் புகையிலைக்கு அடிமையாகும் பள்ளி மாணவ, மாணவிகள்

Cool Lip Means in Tamil
Cool Lip Means in Tamil-பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை கூல்லிப் எனப்படும் புகையிலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். புகை பிடித்தாலோ, மற்ற போதை வஸ்துக்களைப் பயன்படுத்தினாலோ வாசனையை வைத்து பெற்றோர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், வாயில் அடக்கி வைத்துக்கொள்ளும் கூல்லிப் புகையிலையை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த கூல்லிப் "இனிப்பு மற்றும் மிண்ட் சுவையுடன் கலந்த புகையிலை" ஆகும். இத தலையணை போல பைகளில் கிடைக்கிறது. உதட்டுக்கும் தாடை எலும்புக்கும் இடையில் கீழ் உதட்டில் இந்த தலைகாணியை ஒதுக்கி வைத்துக் கொண்டால் கொஞ்ச நேரம் ஜிவ்வென்று இருக்கும்.
கூல்லிப் போன்றவற்றை மெல்லும்போது பாடங்களை அவர்களால் கவனிக்க முடியாது. மந்த நிலைக்குச் சென்றுவிடுவார்கள்.
இந்த போதை வஸ்துக்கு பள்ளி செல்லும் வளர்இளம் பருவத்தினர் / டீன் ஏஜ் பருவத்தினர் பழக்க நோய்க்கு உள்ளாகி பிறகு அடிமைத்தனத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
புகையிலை = நிகோடின் நிகோடின் ரத்தத்தில் கலக்கும் போது கிடைக்கும் போதை இதே புகையிலை இருக்கும் சிகரெட் / பீடா/ கணேஷ் போன்ற வேறு பல போதை வஸ்துக்களுக்கும் பழக்கத்தை உண்டாக்கி விடக்கூடும்.
புகையிலைப் பொருளை வாங்க வீட்டில் பணம் கிடைக்காதபோது பணத்தைத் திருடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து விலகியே இருக்கின்றனர். நாளடைவில் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகவும், புகையிலைப் பொருட்கள் காரணமாகின்றன.
தமிழ்நாட்டில் அரசு சாரா தொண்டு நிறுவனம் மூன்று மாவட்டங்களில் கள ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் 3021 பேரிடம் நடைபெற்றது. இதில் 23% பேர் இந்த தலைகாணியை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறுகையில், 'நம் வீட்டில் கல்வி பயிலச் செல்லும் செல்வங்களின் புத்தகப்பைகளில் கால்சட்டை கை சட்டைகளின் பைகளில் இது போன்ற விசயங்கள் கிடைத்தால் இதுவரை தாங்கள் சாக்லெட் என்று நினைத்திருக்கக் கூடும். இனி இவற்றைப் பார்த்தால் கட்டாயம் நம் செல்வங்களுக்கு அன்பான அனுசரணையான கவுன்சிலிங் தேவை. கண்டிப்பாக அடி உதை உதவாது. அது நம் மீது ஒவ்வாமையை மட்டுமே உருவாக்கும்.
உங்களின் குடும்ப நல மருத்துவரிடம் குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஒரு சின்ன ஹெல்த் கவுன்சிலிங் கொடுக்கக் கூறுங்கள். அன்பினால் ஆகாதது எதுவுமில்லை. நம்மை சுற்றி இருப்பதை கிடைப்பதை நாம் முதலில் அறிந்து வைத்திருக்க வேண்டும். இதை தடை செய்வது குறித்தும் அரசு முடிவெடுப்பது நல்லது.
பள்ளிகளில் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் மற்றும் நன்னடத்தை பற்றிய கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெறுவது பலனைத் தரக்கூடும். இவ்வாறு கூறியுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu