காணாமல் போன கோயில் சிலை உட்பட 20 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது: அமைச்சர் சேகர் பாபு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சட்ட மன்ற மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு , மானிய கோரிக்கையில் 112 அறிவிப்புகள் துறை சார்பாக அறிவிக்கப்பட்டதாகவும் அதில் 600 க்கும் மேற்பட்ட பணிகளில் இருந்த நிலையில் 7 மாதத்தில் 450 பணிகளுக்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1500 கோடி மதிப்பிலான சொத்துக்கள், 456 நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்றார்.
கோயில்களில் தரமான குங்கும் விபூதி வழங்குவது, முதல் உதவி மையங்கள் ஏற்படுத்துதல்,புதுப்பிக்க வேண்டிய குளங்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவது, புத்தாண்டில் கோயிலில் பணியாற்றுபவர்களுக்கு புத்தாடை வழங்குவது, ரோப் காரை தொடர்ந்து இரண்டு கோவில்களில் லிப்ட் வசதி ஏற்படுத்துவது குறித்து இன்று ஆலோசிப்பதாக கூறினார்.
சென்னை பழனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மூத்தோரை பாதுகாக்க குடியிருப்பு அமைப்பது தொடர்பாகவும் இன்று பேச உள்ளதாக தெரிவித்தார். 30 ஆண்டுகளுக்கு மேலாக காணாமல் போன கோயில் சிலை உட்பட 20 இடங்களில் திருடு போன சிலையை மீட்டுள்ளோம் கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu