சென்னை விமான நிலையத்தில் ரேபிட் பரிசோதனையில் 18 பயணிகளுக்கு பாசிடிவ்
சென்னை விமான நிலைய பரிசோதனை மையம்
சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து துபாய்,தோகா,சாா்ஜா செல்ல வந்திருந்த 18 பயணிகளுக்கு நடந்த ரேபிட் பரிசோதனையில் பாசிடிவ் ரிசல்ட் வந்ததால்,அவா்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டு,குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா சோ்க்கப்பட்டனர் .அவா்களுக்கு ஏற்பட்டுள்ளது டெல்ட்டா வைரஸ்சா? ஒமிக்ரான் வைரஸ்சா? என்று ஆய்வு.
சென்னை சா்வதேச விமானநிலையத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு 30 நிமிடங்களில் ரிசல்ட் கிடைக்கக்கூடிய ரேபிட் பரிசோதனை மையம் உள்ளது.அங்கு நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை நடந்த ரேபிட் பரிசோதனைகளில் 18 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பதற்கான பாசிடிவ் ரிசல்ட் வந்தது.
இந்த 18 பயணிகளும் சென்னையிலிருந்து தோகா,சாா்ஜா,துபாய் நாடுகளுக்கு செல்ல வந்தவா்கள். இவா்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்தவா்கள்.அனைவரும் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்ட ஆண் பயணிகள்.இவா்கள் வெளிநாடுகளில் வேலைக்காக செல்லவந்தவா்கள்.
இதையடுத்து உடனடியாக விமானநிலைய அதிகாரிகள் பாசிடிவ் ரிசல்ட் வந்த 18 பயணிகளின் பயணங்களை ரத்து செய்தனா்.அந்த பயணிகளில் சிலா்,தாங்கள் வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சைப்பெற்று குணப்படுத்திக்கொள்கிறோம் என்று கூறினா். ஆனால் விமானநிலைய அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான 18 பேரையும், அதற்கான சிறப்பு ஆம்புலன்ஸ்களில் ஏற்றி,சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை உள்ள கொரோனா வாா்டுகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனா்.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இந்த 18 பேருக்கும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இவா்களுக்கு ஏற்பட்டுள்ளது டெல்டா வைரஸ்சா? அல்லது ஒமிக்ரான் வகையை சோ்ந்ததா?என்பதை கண்டறிய பரிசோதனைக்கு அனுப்பப்படும். அதுவரை அவா்கள் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருப்பாா்கள் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
சென்னை விமானநிலையத்தில் ஒரே நாளில் நடந்த ரேபிட் பரிசோதனையில் 18 பயணிகளுக்கு பாசிடீவ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu