/* */

மத்திய அரசில் உள்ள 10 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்: ஏஐடியுசி வலியுறுத்தல்

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெறும் அகில இந்திய ஏஐடியுசி மாநாட்டில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

HIGHLIGHTS

மத்திய அரசில் உள்ள 10 லட்சம் காலி பணியிடங்கள்  நிரப்ப வேண்டும்: ஏஐடியுசி வலியுறுத்தல்
X

கேரள மாநிலம் ஆலப்புழாவில்  நடைபெற்ற ஏஐடியுசி அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற நிர்வாகிகள்

மத்திய அரசின் பணியிடங்களில் காலியாக உள்ள 10 லட்சம் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டுமென ஆலப்புழாவில் நடைபெற்று வரும் ஏஐடியுசி 42 -ஆவது அகில இந்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஏ ஐ டி யு சி தொழிற்சங்கத்தின் 42 -ஆவது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் ஆலப்புழாவில் டிசம்பர் 16 தேதி தொடங்கி டிசம்பர் 20 -ஆம் தேதி நிறைவடைகிறது. டிசம்பர் 16 -ஆம் தேதி முதல் நாள் நிகழ்வில் அகில இந்திய பொதுச் செயலாளர் மாநாட்டுக்கு கொடியினை ஏற்றி வைத்தார்.

அதை தொடர்ந்து முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ் குப்தா உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் சிரியா, நேபாளம், போர்ச்சுகல், கஜகஸ்தான், இலங்கை உள்ளிட்ட சர்வதேச தொழிற்சங்கம்( ILO), உலக தொழிற் சங்கங்களின் (WFTU) சம்மேளனத் தலைவர்கள், சோசலிச வியட்நாமின் இந்தியாவிற்கான தூதர் சதோசி சாசாகி.

இந்திய தொழிற்சங்கத்தின் சகோதர சங்க சிஐடியூ தலைவர். டாக்டர் ஹேமலதா, கேரள மாநில தொமுச தலைவர் வினோத்குமார், எச்எம்எஸ் தலைவர் உண்ணிகிருஷ்ணன், ஏஐசிசிடியூ தலைவர் சங்கர், ஏஐயூடியூசி செயலாளர் ராதாகிருஷ்ணன், உழைக்கும் பெண்களுக்கான சேவா அமைப்பின் செயலாளர் சோனியா உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

அகில இந்திய பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர் 42வது மாநாட்டின் வேலை அறிக்கையை சமர்பித்தார். அதைத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றன. மூன்றாவது நாள் மாநாட்டில் ஒன்றிய மோடி அரசு ஆட்சிக்கு வருமுன் ஆண்டு க்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற தேர்தல் கால வாக்குறுதி முழுமையாக நிறைவேற்ற வில்லை.

நாட்டில் 10 கோடிக்கும் அதிகமான படித்த இளைஞர்கள் வேலை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். மத்திய அரசு பணியிடங் களில் காலியாக நிரப்பப்படாமல் உள்ள 10 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

தலித் மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் நாளுக்கு நாள் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு வருவது தடுத்து நிறுத் தப்பட வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கி நடை முறைப் படுத்த வேண்டும்.நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வினால் வீட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.தற்போதைய விலைவாசி அடிப்படையில் அனைத்து தொழில்களிலும் பணி புரியும் அனைவருக்கும், மாத சம்பளம் ரூபாய் 18,000 நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 18 Dec 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  3. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  4. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  5. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  6. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  8. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  9. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  10. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...