விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 10 லட்சம் பேர் பயன்

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவம்பர் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவில் 61,365 ஏக்கரில் 33,258 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 10 லட்சம் பேர் பயன்
X

பைல் படம்

நடப்பு 2022-23ஆம் ஆண்டில், சம்பா நெல் பயிரை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்காக சனி (12.11.2022) மற்றும் ஞாயிறு (13.11.2022) கிழமைகளிலும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

பருவமழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கைச் சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும் பொழுது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி 2022-23ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்ட போதிலும் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-23ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

சம்பா நெற்பயிருக்கான காப்பீடு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 15 அன்று முடிவடைவதாக இருந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட போது, விவசாயிகள் எழுப்பிய கோரிக்கையின் அடிப்படையில், பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 30 வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடிய காலங்களில் காப்பீடு செய்திட வழிவகை இல்லாத போதும், விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 21 வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கியது.

10 லட்சம் பேர் காப்பீடு:

அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் நடப்பு 2022-23ஆம் ஆண்டின் சம்பா/ தாளடி/ பிசானப் பருவ நெற்பயிரில் இதுவரை 23.83 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு சுமார் 10.94 லட்சம் விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்து பதிவு செய்துள்ளனர். மொத்த சாகுபடி பரப்பில் காப்பீடு செய்வதற்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ள 50 சதவீத இலக்கிற்கு தமிழகத்தில் 88 சதவீதம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு அதிகரிப்பு:

2021-2022ஆம் ஆண்டில் இதே கால கட்டத்தில், 20.22 லட்சம் ஏக்கர் பரப்பளவு சுமார் 9.90 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டது. 2021-2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு 2022-2023ஆம் ஆண்டில் சிறப்புப் பருவத்தில் சுமார் 17 சதவீதம் கூடுதலாக காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விவசாயிகள் எவரும் விடுபடாமல் அனைத்து தமிழக விவசாயிகளையும் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 Nov 2022 3:19 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
 5. அரசியல்
  டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
 6. துறையூர்
  திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
 9. லைஃப்ஸ்டைல்
  Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
 10. அவினாசி
  அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...