கோவை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கட்டமைப்பு - பெற்றோர்கள் பெருமிதம்.

கோவை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கட்டமைப்பு - பெற்றோர்கள் பெருமிதம்.
X

 டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி 

48 மணி நேரத்தில் ரூபாய் ஒரு கோடி நிதி - அமெரிக்காவில் வசிக்கும் மேட்டுப்பாளையத்தை டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி.

அமெரிக்காவில் வசிக்கும் கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி ஏற்பாட்டில் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 1 கோடியில் ஆக்சிஜன் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி என்பவர் 48 மணி நேரத்தில் ரூபாய் ஒரு கோடி நிதி திரட்டி கோவை அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கட்டமைப்பை ஏற்படுத்தி தந்துள்ளார். இவருடைய இந்த செயலுக்கு அவரது பெற்றோர்கள் பெருமை அடைந்துள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் கேகே நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் ரங்கசாமி விஜயலட்சுமி தம்பதியினர். ரங்கசாமி முன்னாள் நில வள வங்கி செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய சொந்த ஊர் காரமடை அருகே உள்ள மங்கல கரைப்புதூர்.

டாக்டர் ராஜேஷ் மங்கல கரை புதூரில் ஆரம்பக் கல்வியைக் கற்றார் தொடர்ந்து மேட்டுப்பாளையம் ஜி எம் ஆர் சி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும் தம்பு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையிலும் பெரியநாயக்கன்பாளையம் ஶ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் மேல்நிலைப் படிப்பும் படித்தார்.

அதனைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.அதனைத் தொடர்ந்து குஜராத்தில் எம்.டி மேற்படிப்பு படித்தார். தன்னுடைய திறமையால் சென்னையில் பணியாற்றி பிறகு அமெரிக்காவில் மருத்துவராக பணியில் சேர்ந்தார்.

தற்போது அமெரிக்காவில் ரினோ நகரில் உள்ள மருத்துவமனையில் மூளை ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நித்யா மோகன் மற்றும் குழந்தைகளுடன் ரினோ நகரில் வசித்து வருகிறார். இவரும் இவர் மனைவியும் இணைந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு " ஆர்டர் கார்ப்பரேஷன்" என்ற அறக்கட்டளையை தொடங்கினார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவை என்பதை உணர்ந்து டாக்டர் ராஜேஷ் தனது அத்தை டாக்டர் வாணி மோகன், கங்கா மருத்துவமனை மயக்கவியல் துறை நிபுணர் டாக்டர் பாலவெங்கட் ஆகியோர் மூலம் தெரிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் ஆர்டர் கார்ப்பரேஷன் அறக்கட்டளை மூலம் நிதி திரட்டி மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் கட்டமைப்பை ஏற்படுத்தித்தர முடிவெடுத்தார். அதன்படி கடந்த வாரம் ஒருநாள் நிதி திரட்டும் பணியை தொடங்கியுள்ளார்கள்.

அமெரிக்காவில் உள்ள ராஜேஷின் நண்பர்கள் தெரிந்தவர்களிடம் செல்போன், இ-மெயில், வாட்ஸ்அப்,குறுந்தகவல்,,முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு அவரது மனைவி நித்தியா மோகன், மைத்துனர் ரவிக்குமார், தங்கை சுதா ரவிக்குமார், டாக்டர் ரீத்திகா, ரியா ராஜேஷ் ,ரித்திக் ராஜேஷ், சௌமியா குமார் பொறியாளர் விஜய கீர்த்தி ராமலிங்கம் மருத்துவர் பிரசாந்த் ராகவன் உள்ளிட்டோர் நிதி திரட்டியுள்ளாகள்.

அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. பின்னர் ஆக்சிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் தனியார் நிறுவனத்தை தொடர்புகொண்டு கோவை அரசு மருத்துவமனை இஎஸ்ஐ மருத்துவமனை களில் ஆக்சிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்த ஆர்டர் கொடுத்து அதற்கான தொகையை வழங்கினார்கள்.

கோவை அரசு மருத்துவமனையில் 50 லட்சம் மதிப்பில் நிமிடத்திற்கு 200 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் கட்டமைப்பும், 20 லட்சம் மதிப்பில் 5 ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்களும், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ரூ 27 லட்சம் மதிப்பில் நிமிடத்திற்கு 100 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தியாகும் கட்டமைப்பும், 3 லட்சம் மதிப்பில் படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.

இந்த சேவையை பல்வேறு அமைப்புகள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் கேகே நகரில் வசிக்கும் டாக்டரின் பெற்றோர்கள் ரங்கசாமி விஜயலட்சுமி ஆகியோர் கூறியதாவது.

எங்களுடைய மகன் டாக்டர் ராஜேஷ் மற்றும் மருமகள் நித்யா ஆகியோரின் இந்த சேவை எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. சாதாரண கிராமத்தில் பிறந்து தமிழ் வழிக் கல்வி கற்று அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு அதுவும் தான் படித்த கோவை அரசு மருத்துவமனைக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அவரைப் பெற்ற நாங்கள் பெற்றோர் என்ற முறையில் மிகவும் பெருமை படுகிறோம் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்.

திருக்குறள்...

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil