எழுவரை விடுதலை செய்யக்கோரி தமிழக முதலமைச்சர் குடியரசுதலைவருக்கு கடிதம்

எழுவரை விடுதலை செய்யக்கோரி தமிழக முதலமைச்சர் குடியரசுதலைவருக்கு கடிதம்
X

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்.

சிறையில்வாடும்பேரறிவாளன்,முருகன்,சாந்தன்,ஜெயக்குமார்,ராபர்ட்பயாஸ்,ரவிச்சந்திரன் நளினி - ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன்,முருகன்,சாந்தன்,ஜெயக்குமார்,ராபர்ட்பயாஸ்,ரவிச்சந்திரன் நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கடந்த 9-9-2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி உள்ளதையும் அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டும்தான் இருக்கின்றது எனக் கூறி தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவர் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை தீர்மானத்தை அனுப்பி வைத்து இருப்பதையும் சுட்டிக்காட்டி கடந்த 19-5-2021 அன்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேற்கண்ட ஏழு பேரும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடுகிறார்கள். உச்சநீதிமன்றம் கொரோனா பரவலைத் தடுக்கவும் தமிழக சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டும் கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தி உள்ளது என தெரிவித்து ஏழு பேரையும் விடுதலை செய்ய 9-9-2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பி உள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர் பாலு குடியரசுத் தலைவரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து இன்று அளித்துள்ளார்.என தமிழக அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

#பேரறிவாளன்,#முருகன்,#சாந்தன்,#ஜெயக்குமார்,#ராபர்ட்பயாஸ்,#ரவிச்சந்திரன்,#நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்


#இன்ஸ்டாநியூஸ்,#தமிழ்நாடு,#தகவல்,#Instanews,#Tamilnadu,#MLA,#சட்டமன்றஉறுப்பினர்,#தமிழகஅமைச்சர்,#தமிழகமுதல்வர்,#முகஸ்டாலின்,#MKstalin,#Stalin,#Chiefminister,#திமுக,#நாடாளுமன்றகுழுத்தலைவர்,#டிஆர்பாலு,#குடியரசுத்தலைவர்,#ராம்நாத்கோவிந்,#ராஜீவ்காந்தி கொலை வழக்கு,#எழுவர்விடுதலை

Tags

Next Story
Weight Loss Tips In Tamil