திருவண்ணாமலை: 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு

திருவண்ணாமலை அறிவியல் பூங்காவில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவரும்மான சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 முன்னிட்டு வாக்காளர்களிடம் 100% வாக்களிப்பதன் அவசியம் மற்றும் ஜனநாயக கடமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வேங்கிக்கால் ஏரிக்கரையில் அமைந்துள்ள அறிவியில் பூங்காவில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்பு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் 'I am Voting on 6th April - My Vote Counts' என்ற செல்பி புகைப்பட சாவடியை (Selfie Photo Booth) திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் 06.04.2021 அன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர்கள் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி (VVPAT) மூலம் முதல் முறை வாக்களிக்கவுள்ள இளம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாக்களிப்பது குறித்த செயல்விளக்கம் அளித்தார்.

இதனை தொடர்ந்து அறிவியல் பூங்காவில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு சிலம்பாட்டம், எஸ்.ஆர்.எம். நடனப் பள்ளி குழந்தைகளின் நடனம், மற்றும் கீதம் இசைக் குழுவினரின் இசைக் கச்சேரி, ஆகிய நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து கண்டுகளித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் வெற்றிவேல், துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதா பேகம், தேர்தல் அலுவலர்கள், பணியாளர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!