மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் - காட்சி ஊடகத்துக்கு முதல்வர் வேண்டுகோள்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அனைத்து காட்சி ஊடகத்தினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செய்தி ஊடக ஆசிரியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்றும் தற்போது கொரோனா தடுப்பில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார். மேலும் செய்தி வாசிப்பாளர்கள் மாஸ்க் அணிந்து செய்தி வாசிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அதே போல தொலைக்காட்சி தொடர்கள்,செய்திகளுக்கிடையே வெளியிட அரசு கொடுத்துள்ள விழிப்புணர்வு வாசகங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமைச் செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொலைக்காட்சிகளில் தொடர் நாடகங்கள் மற்றும் செய்திகள் ஒளிபரப்பபடும் பொழுது வெளியிடக்கூடிய விழிப்புணர்வு வாசகங்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி முகக் கவசம் உயிர்க்கவசம், முறையான முகக்கவசம் அணிவோம் கொரோனாவை முற்றிலும் தவிர்ப்போம், சமூக இடைவெளி காப்போம் உறவுகளுடன் வாழ்வோம், முகம் கை சுத்தம் பேணுவோம் கொரோனாரவை தோற்கடிப்போம், அவசியமின்றி வெளியே வரவேண்டாம் அருகே மரணத்தை அழைக்க வேண்டாம், கூடிப் பேசுவதைத் தவிர்ப்போம் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் காப்போம், கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவுவோம் முற்றிலும் கொரோனாவை ஒழிப்போம், வரிசையில் சமூக இடைவெளி காப்போம் வாழ்க்கையை இன்பமுடன் வாழ்வோம், கொரோனா இடம்பெறுவதில்லை நாமே அதை பரப்பும் காரணிகளாக இருக்கின்றோம் உள்ளிட்ட 16 வாசகங்களும்...
செய்திகள் வாசிக்கும்போது...
தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்கள் முகம் கவசத்துடன் தொடங்க வேண்டும் பின்னர் நாங்கள் தனி அறையில் இருப்பதால் முகக்கவசம் அணியவில்லை நீங்கள் அவசியம் அணிய வேண்டும் என கூற வேண்டும், நித்தம் நீராவிபிடி கொரோனாவை விரட்டி அடி, உடலில் கழிவுகளை நீக்கி ஆரோக்கியத்தை பெருக்கு, தினசரி நீராவிபிடிப்போம் கொரோனாவை தடுப்போம், தினசரி மூச்சுப்பயிற்சி செய்வோம் உடலில் ஆக்சிஜன் அளவை பராமரிப்போம், முளைகட்டிய பயிரை உண்போம் ஆரோக்கியம் பெறுவதை காண்போம், உள்ளிட்ட 13 வாசகங்களையும் தவறாமல் தங்களது தொலைக்காட்சிகளில் அடிக்கடி வழி ஒளிபரப்பும்படி தமிழக அரசு சார்பில் அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu