வார் ரூமிற்கு வந்த முதல்வர் - உதவி கேட்டவருக்கு மகிழ்ச்சி.
கொரோனா வார் ரூமிற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்: உதவி கேட்டவருடன் தொலைபேசியில் பேசினார்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா வார் ரூமிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் விசிட் அடித்து அங்கு பணிகளை மேற்பார்வையிட்டது மட்டுமல்லாமல் உதவி கோரி வந்த அழைப்பு ஒன்றுக்கு தானே பதில் அளித்து தேவையான உதவிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்..
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் வார்ரூம் (கட்டளை மையம்) ஒன்று அமைக்கப்பட்டது. இங்கு ஆக்ஸிஜன் படுக்கை, ரெம்டெசிவிர் மருத்து, வெண்டிலேட்டர் போன்ற நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்றிரவு டி.எம்.எஸ் வளாகத்திற்கு திடீரென வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு ஒருங்கிணைக்கப்படும் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வானகரம் பகுதியிலிருந்து கட்டணமில்லா 104 தொலைபேசி எண்ணுக்கு பங்கஜம் என்பவரிடமிருந்து வந்த அழைப்பை எடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அவரது தேவையை பதிவு செய்துகொண்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கை வசதி வழங்க உத்தரவிட்டார். எதிர்முனையில் முதல்வரே பேசியதால் மகிழ்ச்சியடைந்த பங்கஜம் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்..
இதனையடுத்து இம்மையத்தின் மூலம் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், காலியிட விவரத்தினை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றும், பெறப்படும் அனைத்து அழைப்புகளுக்கும் முறையான உதவி மற்றும் ஆலோசனைகள் தடையில்லாமல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
முதல்வரின் இந்த திடீர் ஆய்வின் போது தேசிய நல்வாழ்வு குழும இயக்குனர் தாரேஸ் அகமது மற்றும் ஐஏஎஸ் அதிகரிகள் நந்தகுமார் மற்றும் உமா ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu