/* */

தயாரிப்பு பணி மும்முரம். நாளை முதல் ஆக்சிஜன் சப்ளை:ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அறிவிப்பு

ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி

HIGHLIGHTS

தயாரிப்பு பணி மும்முரம். நாளை முதல் ஆக்சிஜன் சப்ளை:ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அறிவிப்பு
X

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அத்தியாவசியமான ஆக்சிஜன் தேவைகள் அதிகரித்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.

கடந்த மாதம் 27-ம் தேதி இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலுக்கு ஏற்ப தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அனுமதி அளித்து இயக்க தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது.

ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர், ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்கியது..

மே மாதம் 6 ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பணிகள் தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலையின் பிரதான நுழைவுவாயில் சீல் வைக்கப்பட்டுள்ளதால், ஆலையில் அமைந்துள்ள மற்றொரு வழியாக பணியாளர்கள் ஆலை வளாகத்திற்குள் செல்ல ஏற்பாடும் செய்யப்பட்டது.

மோட்டார்கள், இயந்திரங்களை இயக்கி பரிசோதித்து பராமரிக்கும் பணி தொடங்கி ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மூன்றாண்டுகளாக மூடப்பட்டிருப்பதால், அனைத்துப் பகுதிகளிலும் தொழில்நுட்பப் பரிசோதனை நடைபெற்றது.ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு குடிநீர் வழங்குவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் பணிகளை மேற்கொண்டனர்.

பூர்வாங்க பணிகள் முடிவடைந்த பிறகு, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழு மீண்டும் ஆய்வு நடத்தி, ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்தது. தற்போது ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்கு தயாராகி உற்பத்தி நடைபெற்று வருகிறது.

தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெறுவதால் நாளை முதல் ஆக்சிஜன் சப்ளை செய்யப்படும் என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 May 2021 2:21 PM GMT

Related News