ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஜீயர் நியமனம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு ரத்து.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஜீயர் நியமனம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு ரத்து.
X
தற்காலிகமாக ரத்து

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஜீயர் நியமனம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் எஸ்.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் காலியாக உள்ள 51-வது ஜீயரை நியமனம் செய்வதற்காக தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு கோயில் இணையதளத்தில் சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஜூன் 8-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவில் நிர்வாகம் ஜீயரை கோயில் நிர்வாகம் நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் கோயில் ஸ்தலக்காரர்கள் தான் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் மாரிமுத்து செய்தியாளர்களிடம் கூறும்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஜீயர் நியமனம் என்பது கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோவில் நிர்வாகம் மூலம் தான் வழக்கமாக நியமனம் செய்யப்படுகிறார்.

அவருக்கு ஊதியம் உண்டு இருக்கும்போதே கோவில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டு கோவில் பணியாளராக என் பணிகளை செய்வேன் என கடிதம் கொடுப்பது தான் நடைமுறையில் உ்ள்ளது .தற்பொழுது நிர்வாக காரணத்திற்காக நியமனம் குறித்த அறிவிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!