விமான நிலைய ஊழியர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம்

சென்னை விமானநிலையத்தில் பணியாற்றும் விமானநிலைய ஆணைய ஊழியா்கள் ஊதிய உயா்வு,ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை விமானநிலைய நிா்வாக அலுவலகம் முன்பு ஒரு நாள் உண்ணாவிரதம், உணவு இடைவேளை ஆா்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை நடத்துகின்றனா்.
சென்னை விமானநிலைய வளாகத்திற்குள் ( NAD என்ற நேஷ்னல் அத்தாரிட்டி டிவிஷன்) தூத்துக்குடி,சேலம்,மதுரை,திருச்சி,கோவை உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள விமானநிலையங்களின் தலைமையகம்,மற்றும் (IAD என்ற சென்னை சா்வதேச டிவிஷன்) ஆகிய 2 தலைமையகங்கள் செயல்படுகின்றன. இந்த 2 பிரிவுகளிலும் விமானநிலைய ஊழியா்கள்,அதிகாரிகள் சுமாா் 2 ஆயிரம் போ் பணியாற்றுகின்றனா்.
இவா்கள் ஊதிய உயா்வு,ஓய்வூதியம்,வட்டியுடன் நிலுவை தொகையை வழங்குவது,2007 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து ஓய்வுதியத்தை கணக்கிடுவது என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா்.ஆனால் டில்லியில் உள்ள இந்திய விமானநிலைய ஆணையமும், விமானப்போக்குவரத்து அமைச்சகமும் விமானநிலைய ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் இருபிரிவுகளிலும் பணியாற்றும் ஊழியா்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறித்தி போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனா்.அதன்படி இன்று காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சென்னை விமானநிலைய வளாகத்தில் உள்ள NAD நிா்வாக அலுவகம் முன்பு உண்ணாவிரதப்போராட்டம் நடத்துகின்றனா்.
அதைப்போல் விமானநிலைய வளாகத்திற்குள் உள்ள IAD நிா்வாக அலுவலகம் முன்பு இன்று பகல் ஒரு மணியிலிருந்து 2 மணி வரை உணவு இடைவேளை ஆா்ப்பாட்டமும் நடத்துகின்றனா்.
சென்னை விமானநிலையத்தில் பணியாற்றும் இருபிரிவு ஊழியா்களும் இணைந்து ஒரே நாளில் இரு அலுவலகங்களின் முன்பும் போராட்டங்களை நடத்துவது சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானநிலைய ஊழியா்களின் இந்த போராட்டங்களால் சென்னை விமானநிலையத்தில் இன்று விமான சேவைகள் எதுவும் பாதிக்கப்பாடாது என்றும்,பயணிகளுக்கோ,விமான சேவைகளுக்கோ இடையூறு ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் அமைதி போராட்டம் நடத்துகிறோம் என்று விமானநிலைய ஊழியா்கள் தரப்பில் கூறுகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu