திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தடுப்பூசி

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தடுப்பூசி
X

திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜன 16 ம் தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கொரோனா முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன்.குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!